மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின்படி, பெற்றோலில் 20 சதவீத எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் இப்போது E20 பெற்றோல் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த திடீர் மாற்றத்தினால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். E20 பெற்றோலைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, தங்கள் வாகனங்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாகப் பயனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், வாகனத்தின் வேகம் குறைந்துள்ளதாகவும், மேடான சாலைகளில் பயணிக்கும்போதோ அல்லது ஏசி (AC) இயங்கும்போதோ கார் மிகவும் மந்தமாக இயங்குவதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
சாதாரண பெற்றோலை விட எத்தனோல் குறைந்த ஆற்றலையே கொண்டிருப்பதால், மைலேஜ் குறைவது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்பதை நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளையில், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதற்கு முன்பு வாங்கிய பழைய வாகனங்களின் என்ஜின்களில் இருக்கும் இறப்பர் குழாய்கள், கேஸ்கெட்டுகள் மற்றும் சீல் ஆகியவற்றைப் பெற்றோலில் உள்ள எத்தனோல் அரித்துச் சிதைத்துவிடுமோ என்ற அச்சம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
The mandatory implementation of E20 fuel (petrol mixed with 20% ethanol) across India has caused significant frustration among vehicle owners due to concerns over reduced fuel efficiency and potential engine damage. While newer vehicles are designed to handle this blend, many drivers are reporting performance issues and fear that the ethanol could corrode the components of older engines, leading to ongoing uncertainty and dissatisfaction with the government’s accelerated transition policy.