பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற ஒருவர் மீது இரு வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், புளியங்குளத்தில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்னால், நேற்று (07) இரவு 8.00 மணியளவில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்துக் கிடைத்த தகவல்களின்படி, வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று, அங்கிருந்த பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஹயஸ் வாகனத்தால் மோதி தூக்கி எறியப்பட்ட அந்த நபர் மீது, அதே நேரம் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியுள்ளன.
இந்தக் கொடூரமான விபத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கடும் காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
An unidentified man, approximately 55 years old, was killed in a gruesome accident while crossing a pedestrian crossing near the Puliyankulam fuel station. He was first hit by a speeding high-ace van traveling from Vavuniya to Jaffna, which flung him into the path of an oncoming car heading in the opposite direction. The car’s wheels then ran over him, causing fatal injuries. Puliyankulam police are investigating the incident.