Skip to main content

Super Tamils

பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு…! நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சி தொடர்கிறது.

ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த மரணம் சம்பவித்திருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் மூத்த அதிகாரிகளுக்கும் இன்று (08) காலை 7.30 மணிக்கு அவசர விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறை மோதல் குறித்தும், வருங்காலத்தில் மற்ற சிறைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நீர்கொழும்பு சிறையில் இருந்த 1,033 கைதிகள் அவசர அவசரமாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வன்முறையை முன்னின்று நடத்தியதாகக் கருதப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் பூஸா சிறைக்கு மாற்றப்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைக்குள் வெடித்த இந்த மோதலில் இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் சிறைத்துறை ஊழியர்கள் ஆவர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள 100 பேரில் 20 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கர மோதல் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிலர், சிறை அதிகாரிகளின் தலைகளின் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியதே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதத்திற்குக் காரணம் என சிறைவட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Following a tense riot at the Negombo prison, a transferred inmate has died at the Boossa prison due to sudden illness. In response to the clash, which resulted in 27 deaths (including 7 prison officers) and left many injured, the government has relocated over 1,000 inmates and called an urgent meeting of top prison officials nationwide to prevent further violence across the country’s penal system.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்