அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தம்பதியர், தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கணவருக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது கணவரைக் கண்டித்த போதிலும், அவர் அந்தத் தொடர்புகளைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, கணவர் ஒரு இளம் பெண்ணைத் தனது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. அப்போது மதுபோதையில் இருந்த கணவனின் பிறப்புறுப்பை அப்பெண் துண்டித்து வீசியுள்ளார். பின்னர் கணவரை அறையிலேயே வைத்துப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அறையிலிருந்து வெளியே வர முடியாமல் வலியால் அலறிய கணவரின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
_____________________________________________________________________________________________
In a shocking incident in Coimbatore, a woman originally from Assam mutilated her husband’s genitals after discovering his extramarital affairs. The conflict escalated when the husband allegedly brought another woman to their home, leading to a heated argument. The wife attacked her intoxicated husband, locked him in a room, and fled the scene; the victim was later rescued by neighbors and is currently undergoing medical treatment.