பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம், மிகக் குறுகிய காலமான வெறும் 20 நாட்களுக்குள் நான்கு குற்றவாளிகளுக்கு மொத்தமாக 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரால் இந்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி சமிக குருகே இந்த அனைத்து வழக்குகளையும் திறம்பட வழிநடத்தியிருந்தார்.
இதன்படி, துறவற வாழ்க்கையை மேற்கொள்வதற்காக விகாரையிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, சேர்ந்த முதல் நாளிலிருந்தே மிகக் கொடூரமான முறையில் தகாத சீண்டல்களுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ சம்புத்த வாலுகாராம விகாரையின் அதிபருக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல், மற்றொரு வழக்கில் 10 வயது சிறுவனைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கலென்பிந்துணுவௌ, சிவலாகுலம ஸ்ரீ சீவலி சைத்தியாராம விகாரையின் அதிபருக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உறவுமுறையில் தனது சொந்த சகோதரியான 7 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக கே.எஸ். சுமுது சம்பத் குமார என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது காதலியின் 15 வயதுடைய மகளை மிகவும் இரக்கமற்ற முறையில் கொடூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் 32 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
The Anuradhapura Special High Court for Child Offences sentenced four individuals to a total of 101 years of rigorous imprisonment within just 20 days for severe child abuse. The convicts include two Buddhist monks who abused young boys entrusted to their care, a man who assaulted his 7-year-old sister, and another individual who abused his partner’s 15-year-old daughter.