Skip to main content

Super Tamils

இலங்கையை உலுக்கிய இளம் பெண் கொலை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றிய 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது காதலனும் கனடா செல்வதற்காகத் திட்டமிட்டு, அதற்காகப் பெருமளவு பணத்தைக் கடனாகப் பெற்றிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், வெளிநாடு செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாததால், பணம் கொடுத்தவர்கள் தங்கள் தொகையைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த கடுமையான மன உளைச்சல் காரணமாக, அவர்கள் கடந்த 3ஆம் திகதி முதல் நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான சூழலில்தான், நேற்று முன்தினம் தெல்தெனிய பகுதியில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்த கார் ஒன்றிலிருந்து அந்தப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவளுடைய காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து, தெல்தெனிய பகுதியில் விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணைகளில், உயிரிழந்த பெண் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதும், அவர் அம்பாறை மருத்துவமனையில் இயன்முறை மருத்துவராகப் பணிபுரிந்து வந்தவர் என்பதும் உறுதியாகியுள்ளது.

அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சந்தேக நபரான காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், தான் பல நாட்களாகச் சாப்பிடவே இல்லை என்று அந்தப் பெண் தனது சகோதரனிடம் தொலைபேசி மூலம் கூறியதாகப் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் காதலனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான இந்தக் காதலனுக்கும், உயிரிழந்த மருத்துவப் பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களாகக் காதல் தொடர்பு இருந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The police have launched a manhunt for a software engineer who is suspected of abandoning the body of his girlfriend, a 33-year-old female physiotherapist, inside a car in Teldeniya, Kandy. Investigations revealed that the couple had borrowed a massive sum of money to migrate to Canada, but due to their failure to execute the plan, they faced immense financial pressure from creditors, leading them to hide in a Nuwara Eliya hotel, where the victim suffered severe depression before her death.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்