FIFA உலகக்கிண்ணப் போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
டல்லாஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ணப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தேடிவந்தது. இந்த அருமையான வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய ஹாரி கேன், பந்தை வலைக்குள் தள்ளி அதை கோலாக மாற்றினார்.

அதன்பின்னர் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் குரோஷிய அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் பட்டுரினா ஒரு கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹாரி கேன் 42வது நிமிடத்தில் இங்கிலாந்துக்காக மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குரோஷியாவின் பெட்டர் முஸா ஆட்டத்தின் 45+5வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியதும், இங்கிலாந்து அணியின் ஜூடே பெல்லிங்கம் ஒரு அபாரமான கோலை அடித்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், 85வது நிமிடத்தில் அந்த அணியின் முன்னணி வீரரான மார்கஸ் ராஷ்போர்ட் மற்றுமொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இறுதிவரை சுவாரசியமாகச் சென்ற இந்த ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த ஆட்டம் முழுவதும் இரு அணிகளைச் சேர்ந்த எந்தவொரு வீரருக்கும் நடுவரால் மஞ்சள் அட்டை கூட காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
England secured a 4-2 victory over Croatia in a thrilling FIFA World Cup match held at the Dallas stadium. Harry Kane opened the scoring for England with a successful 12th-minute penalty and scored again later, alongside goals from teammates Jude Bellingham and Marcus Rashford. Despite determined replies from Croatia’s Martin Baturina and Petar Musa, England maintained their dominance until the final whistle in a remarkably clean game where no yellow cards were issued to either side.