இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் வடக்கில் இருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தங்கத்தை கடத்தி வந்த விமானி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவருடன் விமானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்றவர்கள் பற்றி இன்று வரை எந்தவொரு தகவலும் இல்லை என்றும் அதிரவைக்கும் பல உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வெளிவந்துள்ள ஒரு பரபரப்பு காணொளியில் கூறப்பட்டிருப்பதாவது: இறுதிப் போர் நடந்த சமயத்தில், வட பகுதியில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்களை (Containers) சோதித்துப் பார்த்தபோது, அதனுள் பெரும் அளவில் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்த விஷயம் உடனடியாக அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், இந்த விவகாரம் அப்போதைய ராணுவத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குத் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.
தங்கம் பிடிபட்ட தகவல் கிடைத்ததும், ‘இந்த விஷயத்தை ஜெனரலுக்குச் சொல்ல வேண்டாம்’ என்று கோட்டாபயவிடமிருந்து ரகசிய உத்தரவு வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அப்படியே மூடிமறைத்துள்ளனர்.
இந்த தங்கக் கட்டிகள் அனைத்தும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவே கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுவும் ஒரே ஒரு குறிப்பிட்ட விமானியைப் பயன்படுத்தி மட்டுமே இந்த கடத்தல் நடந்துள்ளது. இதில் இறுதித் தவணை தங்கக் கொள்கலன்களைக் கொண்டு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த துப்பாக்கிதாரிகள் அனைவரும் இன்று வரை என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் மாயமாகியுள்ளனர். அதேநேரம், அந்த விமானியும் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி இறந்துபோனார்.
இதற்கான எந்தவொரு ஆதாரமும் மிஞ்சாதவாறு ராஜபக்ச தரப்பினர் தங்களின் குற்றங்களை மிகச் சாமர்த்தியமாக மறைத்துவிட்டனர். இருப்பினும், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தங்கம் மாயமான இந்த விவகாரம் குறித்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவானது முன்னாள் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கடந்த 11ஆம் தேதி நேரில் வாக்குமூலம் ஒன்றைச் சேகரித்துள்ளது.
மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் இத்தனை காலமாக ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குச் சொந்தமான அதீத பாதுகாப்புடைய ரகசிய பெட்டகங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறப்படுகின்றது.
Shocking details have emerged from a video revealing that a massive cache of gold seized from the LTTE during the final phase of the war was airlifted from the North to Colombo under the orders of then-Defense Secretary Gotabaya Rajapaksa, keeping then-Army Commander Sarath Fonseka in the dark. The pilot who transported the gold was reportedly shot dead, and the security personnel on board have gone missing without a trace. While allegations suggest the Rajapaksa family covered up the operation, the Bribery and Corruption Commission has recently recorded a statement from Field Marshal Sarath Fonseka, amid reports that the gold remains stored in highly secure military intelligence vaults.