பிரித்தானியாவின் மான்செஸ்டர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மான்செஸ்டரின் பிளாக்லி பகுதியில் அமைந்துள்ள கோ-ஆப் அகாடமி பள்ளியில் கத்திக்குத்துத் தாக்குதல் நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவசர கால மீட்புக் குழுவினரும் போலீசாரும் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 14 வயதுடைய ஒரு சிறுவன், அதே வயதுடைய ஒரு சிறுமி மற்றும் 27 வயதுடைய நபர் என மொத்தம் மூன்று பேர் கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்ற போதிலும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடுகளுக்குத் திரும்பினர்.
இந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய 14 வயது சிறுமியைப் போலீசார் அந்த இடத்திலேயே கைது செய்தனர்.
முதலில், மற்றவர்களுக்குக் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அந்தப் பிரிவின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மேலும், மனநல மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அந்தச் சிறுமி உடனடியாக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய 14 வயது சிறுமி மீது தற்போது 3 கொலை முயற்சி வழக்குகளும், பள்ளி வளாகத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக 2 வழக்குகளும் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சிறுமி தற்போது மருத்துவக் கண்காணிப்பில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் டேவிட் மீனி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதக் காரணங்கள் எதுவும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், வெள்ளிக்கிழமை அன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்தச் சிறுமி ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
A 14-year-old girl has been charged with three counts of attempted murder and two counts of possessing a bladed article inside a school premises following a stabbing incident at the Co-op Academy in Blackley, Manchester. The attack, which officials confirmed has no terrorist links, left two 14-year-old students and a 27-year-old adult injured. While the victims have been discharged from the hospital after treating non-life-threatening injuries, the suspect remains under police guard in medical care ahead of her appearance at the Westminster Magistrates’ Court.