புதிய இணைப்பு: சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வழக்கில் இருந்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு இன்று (12.06.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, இது ஒரு சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதால், சங்கீத்சனுக்கு பிணை கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
கிளிநொச்சியைச் சேர்ந்தவரான சங்கீத்சன், தனது சமூக வலைத்தளங்களில் தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து பதிவிட்ட காரணத்திற்காகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல், அவரை வெளியில் கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகளில் பல தமிழ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதேநேரம், தமிழர் தாயகப் பகுதிகளில் சங்கீத்சனின் விடுதலைக்காகப் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும், இன்று (12.06.2026) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவருடைய விளக்கமறியல் வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், அவர் மீதான பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lankan rap artist Sangeethsan from Kilinochchi, who was detained under the Prevention of Terrorism Act (PTA) for sharing a modified patriotic song on social media, has been granted bail by the Chavakachcheri Magistrate’s Court. Following intense public protests and interventions by Tamil political leaders, the court dropped the severe anti-terror charges during today’s hearing, converting the case into a regular matter and paving the way for his release.