Skip to main content

Super Tamils

கட்டுநாயக்கிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் ஆபத்து…! நள்ளிரவில் பரபரப்பு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL606 என்ற விமானம் வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது. ஆனால், கிளம்பிய சில நிமிடங்களிலேயே அது மீண்டும் கொழும்பு நோக்கித் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்தே, அது உடனடியாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டுள்ளது.

பயணத்தின்போது திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து விமானத்தின் ஒரு எஞ்சினில் இருந்து நெருப்புப் பிழம்புகள் வெளியேறியதை பார்க்க முடிந்ததாகவும் அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அடுத்த சில நிமிடங்களிலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரே, விமானத்தை மின்னல் தாக்கிய விபரம் பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் விமானத்தின் ஒரு எஞ்சினில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக விமானப் பணியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிட்னி நோக்கிய பயணத்தை மேற்கொண்டு தொடர முடியாது என்றும் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து கொழும்புக்குத் திரும்பிய அந்த விமானம், எந்தவொரு விபத்தோ ஆபத்தோ இன்றி மிகப்பத்திரமாகத் தரையிறங்கியது. பதற்றமான அந்த இக்கட்டான சூழலிலும், மிகவும் அமைதியாகவும் சாதுரியமாகவும் செயல்பட்டு, விமானத்தில் இருந்த அனைவரது உயிரையும் பாதுகாத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நல்லவேளையாக, இந்த சம்பவத்தில் பயணிகள் அல்லது பணியாளர்கள் என யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

அதிகாலை 2.05 மணி வரை பயணிகள் அனைவரும் விமானத்திற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான அடுத்தகட்ட பயண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தேவையான உணவு மற்றும் சிற்றுண்டிகளும் அங்கேயே வழங்கப்பட்டன.

A SriLankan Airlines flight (UL606) heading from Katunayake to Sydney was forced to return to Colombo shortly after takeoff on Friday after lightning struck one of its engines. Passengers reported hearing a loud noise and seeing flames from the engine, which sustained minor damage. Thanks to the professional and calm handling of the situation by the crew, the aircraft landed safely back at the airport with no reported injuries to anyone on board, and passengers were provided with refreshments while alternative arrangements were made.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்