சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த இளம் தடகள வீரரான ருமேஷ் தரங்க உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘டயமண்ட் லீக்’ தடகளப் போட்டியில், 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர், புதிய தேசிய சாதனையையும் அத்தொடரின் புதிய சாதனையையும் நிலைநாட்டியிருந்தார்.
இந்த அபாரமான திறமையின் மூலம், உலக தடகள தரவரிசைப் புள்ளிகள் பட்டியலில் 1,324 புள்ளிகளைத் தன்வசப்படுத்தியுள்ளார் ருமேஷ்.
இதேவேளை, இப்பட்டியலில் ஜேர்மனி நாட்டின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடா நாட்டின் எண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
மேலும், உலகளவில் மிக பிரபலமான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Sri Lankan javelin thrower Rumesh Tharanga has achieved a historic milestone by securing the 3rd spot in the latest World Athletics rankings. This achievement comes after his record-breaking performance at the Diamond League in Rome, where he set a new national and tournament record with a throw of 92.62 meters, earning him 1,324 points. He currently trails Germany’s Julian Weber and Grenada’s Anderson Peters, while renowned South Asian athletes Neeraj Chopra and Arshad Nadeem hold the 5th and 10th positions respectively.