போக்குவத்து விதிகளை மீறினால் குறைபாட்டுப் புள்ளி…! அக்டோபர் முதல் பரிசோதனை.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் தேசிய போக்குவரத்துச் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கான “குறைபாட்டுப் புள்ளி முறைமை” (Demerit Points System) எதிர்வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள ‘மகநெகும மஹமெதுர’ அமைச்சரவை மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கமைய, […]