இலங்கைக்கு 3 தொன் காசநோய் நிவாரண மருந்துகளை வழங்கியது இந்தியா.
இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் எடையுள்ள காசநோய் நிவாரண மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவின் “அண்டை நாட்டுக்கு முதலிடம்” கொள்கையின் கீழ் இந்த மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய வானூர்திப் படையின் C-130J ரக சிறப்புப் போர் வானூர்தி மூலம் இந்த மருந்துகள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் […]