இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் எடையுள்ள காசநோய் நிவாரண மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
இந்தியாவின் “அண்டை நாட்டுக்கு முதலிடம்” கொள்கையின் கீழ் இந்த மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய வானூர்திப் படையின் C-130J ரக சிறப்புப் போர் வானூர்தி மூலம் இந்த மருந்துகள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும், அவற்றுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்