மீன்பிடிக்க சென்ற இருவர் கடலில் மாயம் – தேடுதல் தீவிரம்
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இன்று கடலில் மாயமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 2.00 மணியளவில் வழக்கம் போல மீன்பிடி தொழிலுக்காக ஒருநாள் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த படகு மட்டும் நடுக்கடலில் ஆள் நடமாட்டம் இன்றி மிதந்து கொண்டிருப்பதை சக மீனவர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக இது குறித்து கரைக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, […]