இலங்கை இசையுலகில் பெரும் சோகம்…! பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் இசை மற்றும் கலை உலகைச் சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கலை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (01) இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது பூதவுடல் இன்று புதன்கிழமை (02) பிற்பகல் பொரளை பகுதியிலுள்ள தனியார் மலர்சாலையில் பொதுமக்கள் […]