தென்னாப்பிரிக்காவில் தொடரும் பெண்களின் படுகொலைகள்…! மேலும் ஒரு சடலம் மீட்பு
தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோகன்னஸ்பேர்க்கிற்கு கிழக்கே எகுர்ஹுலேனி நகராட்சிப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு நிறுவன வாகனம் இதனை நேற்றைய தினம் நண்பகல் வேளையில் கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளது. இதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அப்பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம், வயது அல்லது இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு […]