Skip to main content

Super Tamils

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை…! அருகில் வைத்தே துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.

மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதிக்குள் வைத்து இந்த மூன்று தமிழர்களும் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தனர். மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் […]

Read More

நீர்கொழும்பு சிறை கலவரம்…! 200 கைதிகளுக்கு கொலைக் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஜெயிலர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வன்முறைகளின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அங்குள்ள சுமார் 200 கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த 5, 6ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த மோதல்களில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் […]

Read More

நீர்கொழும்பு சிறை கலவரம் திட்டமிட்ட சதியா? அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்…!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மோதலானது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் விளைவு என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தற்போது வெளியாகி வருவதாக குறிப்பிட்டு தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான வன்முறை தற்செயலாக நடந்தது அல்ல; அது நீண்ட நாட்களாகப் போடப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது இப்போது வெளியாகி வரும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. […]

Read More

வெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்களால் கோடிகளில் மோசடி..? வெளியான தகவல்.

இலங்கையர்கள் குழுவொன்றினால் கம்போடியாவில் தங்கியிருக்கும் இணையத்தளம் ஊடாக பாரிய அளவிலான நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது. கம்போடியாவில் முகாமிட்டிருக்கும் இலங்கை நாட்டவர் சிலரைக் கொண்ட குழு ஒன்று, ஆன்லைன் மூலமாக மிகப் பெரிய அளவில் பண மோசடி ஒன்றில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம நேற்று முன்தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் […]

Read More