மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதிக்குள் வைத்து இந்த மூன்று தமிழர்களும் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தரப்பில், எங்களது காணாமல் போன மாடுகளைத் தேடித் பிடிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் வனப் பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகின்றது.
மான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டி மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் நிலவும் நிலையில், சிஐடி விசாரணையின் மூலம் முழு உண்மையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
An autopsy report reveals that three Tamils shot dead by forest officials in Karnataka over alleged deer poaching were shot at close range, while CID has taken over the ongoing investigation amidst rising suspicions and conflicting claims from the victims’ families.