Skip to main content

Super Tamils

எரிபொருள் பெயரில் ஆபத்தான செயல்; பொலிஸார் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, பொதுமக்கள் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், பொதுமக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இதன் காரணமாக, கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கடற்றொழில், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக எரிபொருளைப் பதுக்குபவர்கள் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சமூக வலைதளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வதந்திகளைப் பரப்புபவர்களையும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த உத்தரவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

_______________________________________________________________________________________________________________________________________________

The police have urged the public not to panic-buy or hoard fuel due to Middle East tensions, confirming that Sri Lanka has sufficient stocks. Strict orders have been issued to fuel stations to restrict sales in containers, except for essential sectors, while authorities warn of legal action against hoarders and those spreading rumors online.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *