Skip to main content

Super Tamils

யாழில் இரு பெண்களுடன் 11 பேர் கைது; பகீர் பின்னணி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தக் கும்பலில், யாழ் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு புகுந்து நான்கரை இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி பொலிஸார் வலைவீசி வருகின்றனர். இதற்கிடையில், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாத்திரம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

______________________________________________________________________________________________________________________________

Jaffna police have arrested 13 individuals, including two women, for their involvement in robberies and drug possession. The suspects are linked to a pharmacy heist and a house robbery totaling 650,000 rupees, and will be produced before the Jaffna Magistrate’s Court following further investigations.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *