இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வெளியேறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்.
______________________________________________________________________________________________________________________________________________
Major drug trafficker and murderer ‘Podi Lessi’ (Janith Madusanka), who fled to India after being granted bail in 2024, was extradited from Mumbai and arrived at Katunayake airport early this morning, escorted by CID officials.