லண்டனில் வசிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பையா ஜெயக்குமார் என்பவர், அரசுத் துறையில் பணியாற்றும் 36 வயதுடைய விதவை பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2018-ல் கணவரை இழந்த அந்தப் பெண்ணுக்கு, சமூக வலைத்தளம் மூலம் ஜெயக்குமார் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஆறுதல் கூறுவது போலப் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தியவர், பின்னர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறி நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.
பலமுறை இலங்கைக்கு வந்து அந்தப் பெண்ணைச் சந்தித்த ஜெயக்குமார், அவருடன் நீண்ட காலம் குடும்பம் நடத்தியுள்ளார். இதன் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமார் மீண்டும் லண்டனுக்கே தப்பிச் சென்றுள்ளார். இந்த மோசடி குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
_______________________________________________________________________________________
A 47-year-old Sri Lankan expatriate living in London is accused of deceiving a 36-year-old widow from Jaffna by promising marriage. After gaining her trust through social media following her husband’s death, he maintained a relationship with her during visits to Sri Lanka, which allegedly resulted in her pregnancy before he fled back to the UK.