விண்வெளி ஆர்வலர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் “நெருப்பு வளையம்” எனப்படும் அபூர்வ சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. இந்த கிரகணத்தின் பாதை அண்டார்டிகா மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகள் வழியாகச் செல்வதால், இதனை இந்தியாவில் காண முடியாது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி நாளை மதியம் 3:26 மணிக்குத் தொடங்கி இரவு 7:57 மணி வரை இந்த நிகழ்வு நீடிக்கும். குறிப்பாக அண்டார்டிகாவில் முழுமையாகத் தெரியும் இந்த வளைய கிரகணத்தை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பகுதி அளவிற்குக் காண முடியும்.
சந்திரன் பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்போது சூரியனை மறைப்பதால், அதன் விளிம்புகள் மட்டும் பிரகாசமான மோதிரம் போலக் காட்சியளிக்கும். இதுவே “நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக, கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் நிகழும் இந்த கிரகணத்தின் போது, குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
________________________________________________________________________________
The first annular solar eclipse of 2026, known as the “Ring of Fire,” is set to occur tomorrow, February 17. While it will be visible in Antarctica and parts of Southern Africa, it won’t be seen in India; the event will last from roughly 3:26 PM to 7:57 PM (IST), and astrologers have issued specific cautions as it aligns with the Aquarius sign.