Skip to main content

Super Tamils

சொகுசு காரில் இளைஞர்கள் செய்த செயல்: 5 பேர் கைது

முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கோம்பாவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்த ஐந்து சந்தேகநபர்களும் பிடிபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 முதல் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெகனார் ரக கார் ஒன்றில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்துகொண்டிருந்த போதே இவர்கள் பொலிஸாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 15 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என புதுக்குடியிருப்பு பொலிஸார் மதிப்பீடு செய்துள்ளனர். விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் இதன்போது சோதனையிடப்பட்டது.

இந்தக் கும்பல் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்ததும், ஐந்து சந்தேகநபர்களும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

____________________________________________________________________________________________

Five youths aged between 20 and 28 were arrested in the Kombavil area of Mullaitivu for the possession and sale of “Ice” (Crystal Meth). Acting on a tip-off, the Mullaitivu Crime Prevention Unit caught the suspects while they were selling the drugs from a Wagon R vehicle. Police seized 15 grams of the substance, valued at approximately 225,000 LKR, and are conducting further investigations before producing the suspects at the Mullaitivu District Court.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *