Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரத்திலிருந்து பூந்தோட்டம் திசை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டத்திலிருந்து நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் அவற்றில் பயணித்த இரண்டு பெண்கள் என மொத்தம் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

_______________________________________________________________________________________________

Seven people, including two women and two drivers, were hospitalized following a head-on collision between two three-wheelers on the Vavuniya-Poonthottam main road. The local traffic police have arrived at the scene and are currently conducting an investigation into the cause of the accident.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *