ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை அல்லது வேறு காரணங்களால், அந்தப் பிஞ்சுத் குழந்தையை விற்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிக்கு கடந்த 19-ஆம் தேதி அந்தக் குழந்தையை விற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழந்தை விற்பனை குறித்து காசிமேடு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிரடியாகச் செயல்பட்ட போலீஸார், குழந்தையை விற்ற பெற்றோர், விலைக்கு வாங்கிய தம்பதி மற்றும் இந்த சட்டவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் என மொத்தம் எட்டுப் பேரைக் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட அந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை, தற்போது பாதுகாப்பான முறையில் அரச காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பிஞ்சு குழந்தையை பணத்திற்காக விற்ற இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
______________________________________________________________________________________________
A couple from Kasimedu, Chennai, was arrested for selling their 1.5-month-old newborn son to a childless couple in Krishnagiri for 380,000 Indian Rupees. Following a tip-off, the police arrested eight individuals, including the biological parents, the buyers, and the intermediaries involved in the transaction. The infant has been rescued and placed in a government shelter home.