Skip to main content

Super Tamils

கள்ளக்காதலன் தாக்குதல்: 24 வயது யுவதி பலி

நேற்று (27) பகல் வேளையில் அங்குலான பகுதியில் அமைந்துள்ள சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாத்துவ, குடாவஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவரே இந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

உயிரிழந்த பெண்ணுக்கும், அந்த நபருக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறிப் போனதில், ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணைத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரமான தாக்குதலே பெண்ணின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

________________________________________________________________________________________________

A 24-year-old woman from Wadduwa was killed following a violent dispute with her extramarital partner at the Sayurapura apartment complex in Angulana. Preliminary police investigations reveal that an argument between the two escalated into a physical assault, resulting in the victim’s death.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *