Skip to main content

Super Tamils

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல் விழா..! வவுனியா பாரம்பரிய றோட்டறாக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடை பெற்று முடிந்தது..

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல்… இளைஞர்களின் பண்பாட்டுப் பெருவிழா!  2026.01.25
Rotaract Club of Vavuniya Heritage ஏற்பாட்டில், தாண்டிக்குளம் ஐயனார் மைதானத்தில் சமூக பொங்கல் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த நிகழ்வு, ஐயனார் விளையாட்டு கழக இளைஞர்களின் ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடு, பணிவு, கலாசார உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் , பராம்பரிய நிகழ்வுகளை சமூகத்திற்கு கடத்தும் நோக்குடன் மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிய இந்த விழா அனைவரையும் நெகிழ வைத்தது.

பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் தங்களின் தனித்திறன்களையும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மற்றும் சிலம்பத் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தினர். Chivaleeman Silambam – Vavuniya Branch ஆசிரியர்
திரு. ஞானசேகரம் ஜீவன் அவர்களின் வழிகாட்டலில்சிலம்பக் கலை மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 

இந்த நிகழ்வில், தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக தலைவர்
திரு. இன்பநாதன் அனோஜன் அவர்களும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்திருந்தனர்.

ஒற்றுமை , கலாசாரம் , உற்சாகம்  இந்த மூன்றையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்த ஒரு அழகான, நினைவில் நிற்கும் சமூக பொங்கல் கொண்டாட்டமாக நேற்றய‌ தினம் சிறப்பாக அமைந்திருந்தது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *