Skip to main content

Super Tamils

பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. விசாரணை.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 70,000 டாலர் பெறுமதியான பரிசுப் பார்சல் ஒன்று வந்துள்ளதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு காரணங்களைக் கூறி நயவஞ்சகமாகப் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பெருந்தொகை பணம், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

________________________________________________________________________________________________

The Criminal Investigation Department (CID) has arrested a 40-year-old woman from Rajagiriya for her involvement in a financial scam. The suspect’s bank account was used to receive a large sum of money defrauded from another woman, who was deceived via WhatsApp with a fake promise of receiving a gift parcel valued at 70,000.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *