உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகவும் ட்ரோன் (ஆளில்லா வானூர்தி) தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இன்று காலை ‘பிவ்னிச்னி’ (வடக்குப் பாலம்) பாலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பாலத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ‘பிவ்டெனி’ (தெற்குப் பாலம்) பாலத்தை இலக்காகக் கொண்டும் பல முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஜெர்மன் சான்ஸலர் ஃப்ரீட்ரிச் மெர்ஸ் உக்ரைனுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக அவசர விஜயம் மேற்கொண்டு கீவ் நகரை வந்தடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
அதேவேளை, கீவ் உட்பட உக்ரைனின் ஏனைய பகுதிகள் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.