பிரபல பிரித்தானிய எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86ஆவது வயதில் காலமானார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
தனது வீட்டில் புத்தகம் எழுதிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஜெஃப்ரி ஆர்ச்சர், பின்னர் அரசியலில் இருந்து விலகி முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றினார்.
உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் இதுவரை 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்