Skip to main content

Super Tamils

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி கொலை…! தாயும் படுகாயம்; சந்தேக நபர் தொடருந்து பாய்ந்து தற்கொலை

யாழ்ப்பாணம் நல்லூர், கோவில் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவன், அங்கிருந்த இளம் யுவதியை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தின்போது தடுக்க முயன்ற யுவதியின் தாயாரும் படுகாயமடைந்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், அரியாலை பகுதியில் வைத்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்துக்கு முன்னர் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த தாயார் உடனடியாக மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்