நல்லூரில் இன்று முதல் திலீபனுக்காக ‘அணையா விளக்கு’ போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையை பொலிஸார் அகற்றியதைக் கண்டித்தும், அதனை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை மாலை முதல் ‘அணையா விளக்கு போராட்டம்’ ஆரம்பமாகவுள்ளது. பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நல்லூர் நினைவாலயம் முன்பாக இன்று மாலை 5 மணிக்கு ஏற்றப்படும் இந்த விளக்கு, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை அணையாமல் தொடர்ச்சியாக எரிய வைக்கப்பட்டு இரவு பகலாக இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் […]