Skip to main content

Super Tamils

நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை, ஹபரணை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளிலேயே இந்த விபத்துகள் சம்பவித்துள்ளன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அம்பாறை, தர்மபால மாவத்தையில் கல்முனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹபரணை – திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில், ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் ஹொரணையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் 16 வயதுடைய யுவதியும் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்