சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்துக்கான 7ஆவது மீளாய்வை நிறைவு செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத் ததும், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் 7ஆவது மீளாய்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.