சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது.
‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், அது குறித்து அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த நிபுணர் குழு இலங்கை வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இன்று நாட்டை வந்தடையும் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தமது பணிகளை முன்னெடுக்க உள்ளனர்.
புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை இலங்கை அரசு எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை ஆராய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்தப் புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை அவர்கள் மதிப்பீடு செய்யவுள்ளனர்.
அதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மீளாய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான இறுதி அனுமதியை வழங்குவது குறித்தும் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
____________________________________________________________________________________________
An IMF delegation arrives in Sri Lanka today (Jan 22) for a week-long visit to assess the economic and humanitarian impact of Cyclone ‘Ditwa’. In addition to evaluating infrastructure damage and recovery efforts, the team will focus on granting final approval for the fifth review of the Extended Fund Facility (EFF) following the disaster’s influence on economic stability.