Skip to main content

Super Tamils

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Lankasri Index - Tamil Web Links | Tamil Online FM Live Radio | Listen Now | Tamil News

குறிப்பிடத்தக்க விஷயமாக, அண்மையில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அரண்மனையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்பதற்கான கௌரவம் வாகீசன் மற்றும் அவரது குழுவினருக்குக் கிடைத்திருந்தது. தனக்கே உரித்தான கவித்துவமான பாடல்களால் தென்னிந்தியத் தொலைக்காட்சிகள் உட்பட உலகளவில் புகழ்பெற்ற வாகீசன், இன்று புலம்பெயர் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வாகீசன் குழுவினரின் சமீபத்திய படைப்பான “வண்ணமயில் ஏறும் என் தங்க வடிவேலோ…” எனத் தொடங்கும் பாடல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து வருவதுடன், இணையதளங்களிலும் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

__________________________________________________________________________________________________________________________________________________

Rising Sri Lankan rapper Vagisan Rasiah and his team recently visited the Canadian Parliament to participate in Pongal celebrations, meeting with Minister Gary Anandasangaree and other officials. Known for his unique Tamil rap style and global popularity, including a recent recognition at a Pongal event at the British Royal Palace, Vagisan continues to gain fame with his latest viral hit song “Vannamayi Aerum.”

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *