Skip to main content

Super Tamils

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்…! தலா 200 முதல் 260 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேருக்கும், தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அத்துடன், தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்தே குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(22.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இறுதி தீர்ப்பு இதற்கமைய, முதலாம் குற்றவாளியான முகமது இப்ராகிம் முகமது நௌஃபர் (எனும் நௌஃபர் மௌலவி) என்பவருக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 240 ஆண்டுகளும், ஆறு மற்றும் ஏழாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகளும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

எட்டாம் குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒன்பது மற்றும் பத்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டன.

பதினொன்று மற்றும் பதினைந்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகளும், பதினாறு மற்றும் பதினெட்டாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 220 ஆண்டுகளும் தண்டனையாக வழங்கப்பட்டன.

பத்தொன்பதாம் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தத் தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

அதே சமயம், ஒன்பது பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கொலை, பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்கான சதித்திட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகளை அட்டர்னி ஜெனரல் பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்திருந்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A Colombo special high court sentenced 15 defendants to lengthy prison terms and ordered the seizure of their properties over the 2019 Easter Sunday attacks, while acquitting nine others after a massive multi-charge trial.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்