தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இவரது நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘அப்பா குட்டி’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், வரும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிக்கும் ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியாகி, சோஷியல் மீடியாவில் செம வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் போஸ்டரில், விஜய் ஆண்டனி ஒரு சிறுமியுடன் அளவிலா சந்தோஷத்தோடும் சிரித்துப் பேசும் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், இப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பையும், குடும்ப உறவுகளின் அழகியலையும் வெளிப்படுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் எந்தக் சந்தேகமும் இல்லை.
Actor Vijay Antony’s highly anticipated emotional family film “Appa Kutty,” produced by Vijay Antony Film Corporation, is officially scheduled to release in theaters worldwide on October 16.