உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்சாவா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அசோக் ரதியின் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நில அளவையாளராகப் பணியாற்றி வந்த 40 வயதுடைய அசோக் ரதி, அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்களான கார்த்திக் (16), தேவ் (13) ஆகிய ஐவரும் ஒரே அறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலையா அல்லது குடும்பத் தற்கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
In a shocking incident in Uttar Pradesh’s Saharanpur district, five members of a family were found dead with gunshot wounds to their heads in their residence. The deceased include 40-year-old surveyor Ashok Rathi, his wife, mother, and two teenage sons. Police discovered the bodies in a single room after neighbors raised an alarm, and three pistols were recovered from the scene. Authorities are currently investigating whether the case is one of mass homicide or a family suicide pact.