Skip to main content

Super Tamils

பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘இம்மார்ட்டல்’…! 4 நாட்களில் உலகளவில் ரூ.7 கோடி வசூல் – தொடரும் ரசிகர்கள் வரவேற்பு.

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை தந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், பேச்சுலர், அடியே, ஹாப்பி ராஜ் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சென்ற வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் இம்மார்ட்டல். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்க, சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளியான ‘இம்மார்ட்டல்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று, நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது.

‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்றும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி வசூல் வந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

GV Prakash Kumar and Kayadu Lohar’s recently released horror-thriller film ‘Immortal’ has grossed 7 crores globally within four days of its release, receiving positive reviews and a strong box office response.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்