Skip to main content

Super Tamils

19 வயது மாணவி: யூடியூப் மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் சோக கதி

இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சமீபகாலமாக உடல் எடையைக் குறைப்பதற்கான யூடியூப் வீடியோக்களை கலையரசி தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துக் கடை ஒன்றிற்குச் சென்று, யூடியூபில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் சில மருந்துப் பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அந்த நாட்டு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே கலையரசிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
Premium Photo | Young indian girl using a mobile phone or smartphone ...

ஆனால், அதே இரவு கலையரசிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கலையரசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கலையரசியின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் எச்சரிக்கை: காவல்துறையினர் இது குறித்துக் கூறுகையில், “யூடியூப் வீடியோக்களைப் பார்த்து மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்துகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். கலையரசி உட்கொண்ட நாட்டு மருந்து எது என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது. முறையான பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.


A 19-year-old college student, Kalaiyarasi from Madurai, India, tragically died after consuming traditional medicine she purchased based on YouTube videos. Kalaiyarasi, who was watching videos on weight loss, bought the remedies from a local shop. Shortly after consuming them, she experienced vomiting and fainting. Despite initial medical attention, her condition worsened, and she was declared dead at the government hospital. Police have registered a case and are investigating the incident, cautioning against self-medication based on unverified online content and planning to question the shop that sold the medicine without prescription.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *