Skip to main content

Super Tamils

திருகோணமலையில் மருத்துவ சாதனை…! 3.1 கிலோ பாரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்ட கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சத்திரசிகிச்சையின் போது அகற்றப்பட்ட கல்லானது, உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக அமையக்கூடும் என்று அந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த சாதனையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கும் சாதனைப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வதற்கும் முறையான ஆவணப்படுத்தல் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக மருத்துவத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முன்னர் பிரேசிலில் மிகப்பாரிய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாகப் பதிவுகள் உள்ளபோதிலும், தற்போது திருகோணமலையில் பெறப்பட்ட கல்லை உலக சாதனையாக அறிவிக்க சர்வதேச பதிவுகள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டியது அவசியமாகிறது.

திருகோணமலை மருத்துவமனையில் 52 வயதுடைய ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையிலிருந்து 3.1 கிலோகிராம் எடைகொண்ட பிரம்மாண்டமான கல் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான திறமையான மருத்துவக் குழுவினரே இந்தச் சத்திர சிகிச்சையைச் சிறப்பான முறையில் செய்து முடித்துள்ளனர்.

நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த அந்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, சுமார் 21 சென்டிமீட்டர் நீளமும் 3.100 கிலோகிராம் எடையும் கொண்ட இந்தக் கல் இருப்பது கண்டறியப்பட்டது.

பரிசோதனை முடிவுகளைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டு, மிகவும் சவாலான அந்தச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக மருத்துவக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

A massive kidney stone weighing 3.1 kg and measuring around 21 cm was successfully removed from a 52-year-old male patient at the Trincomalee District General Hospital by a medical team led by Consultant Urologist Dr. Pragalathan Balakrishnan. Doctors believe this could be one of the largest kidney stones ever extracted globally, though formal verification against international records is pending to confirm it as a world record.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்