காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனு என்ற 18 வயது இளைஞர், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அண்மையில் அந்தப் பெண் சோனுவுடன் தங்கியிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் தலையிட்டு அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தனது காதலி அழைக்கிறார் என்று நம்பி ராஜஸ்தான் சென்ற சோனுவுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது அவரைப் பிடிப்பதற்காகப் பெண்ணின் குடும்பத்தினர் நடத்திய நாடகம் என்பது அங்கு சென்ற பின்னரே அவருக்குத் தெரிந்தது. சோனுவைக் கடத்திய கும்பல், அவரை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், மனிதாபிமானமற்ற முறையில் அவரைச் சிறுநீரைக் குடிக்க வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் கொடுமையையும் வீடியோவாகப் பதிவு செய்து, சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி மிரட்டியுள்ளனர். அந்த வீடியோவைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்தனர். தற்போது பொலிஸார் சோனுவை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
An 18-year-old youth named Sonu from Madhya Pradesh was kidnapped and brutally tortured by his girlfriend’s family in Rajasthan. After being lured to Rajasthan under the pretext of meeting his girlfriend, he was held captive for three days, physically assaulted, and forced to drink urine. The captors filmed the inhumane acts and sent the video to Sonu’s family to threaten them. Police have registered a case and are currently working to rescue the youth and arrest the suspects who are currently at large.