Skip to main content

Super Tamils

சிறுமியை சீரழித்த கும்பல்; காதலியை கடத்திய காதலன்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

புதுச்சேரியைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தச் சிறுமி பாகூர் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பெற்றோர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாகூர் பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்தச் சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஒரு இளைஞர் கடத்திச் சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.
The Strangest Places Kidnapped Children Have Been Found

இதனையடுத்து பொலிஸார் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, சிறுமியின் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் என மொத்தம் நான்கு பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சிறுமியின் காதலன் மற்றும் ஒரு சிறுவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள மற்ற இரு சிறுவர்களைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறுவர்களும் பாதியிலேயே பள்ளிக் கல்வியைக் கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


A 14-year-old girl from Puducherry, India, who went missing after school, was rescued from a house in Bahour where she had been held captive. Investigations revealed that her boyfriend, under the pretext of love, had kidnapped her and, along with his friends, subjected her to sexual harassment. Police have filed a POCSO case against four individuals, arresting the boyfriend and one minor, while a manhunt is underway for two other school dropouts involved in the crime.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *