கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இன்று காலை 5 மணியளவில் அனைத்து மாணவிகளும் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுமிகள் மட்டும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர், பூட்டியிருந்த அவர்களின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த இரண்டு சிறுமிகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டனர். தகவலறிந்து வந்த பொலிஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு சிறுமிக்கு 17 வயது, அவர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஆவார். பொதுவாக இவர்கள் இருவரும் தனித்தனி அறைகளிலேயே தங்கி வந்துள்ளனர். அப்படியிருக்கையில், நேற்று இரவு மட்டும் ஏன் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள்? இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Two young female athletes, aged 15 and 17, were found dead in their hostel room at the Sports Authority of India (SAI) center in Kollam, Kerala. The discovery was made early this morning after they failed to show up for training; hostel authorities broke open the door to find them hanging. Police are investigating the mysterious circumstances, particularly why the two girls, who were assigned separate rooms, stayed together last night, to determine if this was a case of suicide or foul play.