Skip to main content

Super Tamils

யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா தங்கம் திருட்டு

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய 10 கோடி ரூபாய் பெறுமதியான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த இந்த இளம்பெண், தான் வேலை பார்த்த நகைக்கடையிலேயே கைவரிசையைக் காட்டியுள்ளார். சிறுகச் சிறுக இவர் தங்கத்தை திருடி வந்ததாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகரின் மையப்பகுதியில் உள்ள அந்தப் பிரபல கடையில் சுமார் ஒன்றரை வருடங்களாக இவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தனக்கு ஜனவரி 21 ஆம் திகதி திருமணம் என்று கூறி வேலையை விட்டு நயமாக விலகியுள்ளார்.
Doonside jewellery thief warning | South Coast Sun

இவர் சென்ற பிறகு கடையில் வரவு செலவுகளைச் சரிபார்த்தபோதுதான், சுமார் 2 கிலோ கிராம் தங்கம் காணாமல் போன அதிர்ச்சித் தகவல் உரிமையாளர்களுக்குத் தெரியவந்தது. இது குறித்து உடனடியாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய யாழ்ப்பாண மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடிய நகைகளில் சிலவற்றை அடகு வைத்தும், சிலவற்றை விற்றும், மீதமுள்ளவற்றை யாருக்கும் தெரியாமல் நிலத்தடியில் புதைத்து வைத்திருப்பதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.


A young woman working at a prominent jewelry store in Jaffna city was arrested for stealing 2 kilograms of gold worth 100 million rupees. Having worked there for over a year, she allegedly stole the items incrementally before resigning under the pretext of her upcoming wedding. Following a stock audit and police investigation, she confessed to selling, pawning, and burying the stolen jewelry, leading the court to remand her until January 27th as investigations continue to recover the goods and identify potential accomplices.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *