முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், கார் ஒன்றில் 78 கிலோ கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்றபோது நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்திப் பகுதியில் தற்காலிகச் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதனுள் 78 கிலோகிராம் கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கஞ்சா பொதிகளைப் பறிமுதல் செய்த பொலிஸார், காரில் வந்த இளைஞரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த ரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே, இந்த விசேட சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அந்த வாகனம் மறித்துச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் இந்த பெருந்தொகை கஞ்சா கடத்தல் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
The Nedunkeni Police arrested a 31-year-old resident of Puthukkudiyiruppu after intercepting a luxury car loaded with 78 kilograms of Kerala cannabis. Acting on intelligence received by the Nedunkeni Police OIC, officers set up a checkpoint at the Periyakulam junction on Tuesday night, seized the contraband, and have launched a full investigation into the smuggling attempt.